துருக்கியில் விமான விபத்து : 32 பேர் பலி

தினமலர்  தினமலர்
துருக்கியில் விமான விபத்து : 32 பேர் பலி

அன்காரா : துருக்கி நாட்டில் சரக்கு விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கியதில் 32 பேர் பலியாகி உள்ளனர்.
துருக்கி நாட்டின் கிர்கிஸ்தானில் கார்கோ நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ரக சரக்கு விமானம் ஒன்று, குடியிருப்புகளின் மீது மோதி விபத்திற்குள்ளானது. சரக்கு விமானம் கீழே விழுந்து, தீப்பற்றி எரிந்தது. இதில் 32 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

மூலக்கதை