ஆயிரம் புத்தகங்களை வாசித்து உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகரான 4 வயது சிறுமி!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆயிரம் புத்தகங்களை வாசித்து உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகரான 4 வயது சிறுமி!

 அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகராக 4 வயதான சிறுமி ஒருநாள் பணியாற்றினார்.

 
ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த டாலியா அராணா எனும் 4 வயது சிறுமி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் என்றழைக்கப்படும் நூலகத்தின் நூலகராக கடந்த ஜனவரி 11ம் தேதி ஒருநாள் பதவி வகித்தார்.
 
 அந்த நூலகத்தின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க நூலகரான கர்லா ஹைடனுடன் அவர் இணைந்து பணியாற்றினார். 
 
இரண்டு வயதிலேயே புத்தகவாசிப்பைத் தொடங்கிய அராணா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்துள்ளார். 
 
நூலகராகப் பதவி வகித்த தினத்தில் நூலகத்தின் ஊழியர்களுடன் கலந்துரையாடிய அராணா, குழந்தைகள் எழுதிப் பழகுவதற்காக சுவரில் வெள்ளை நிற பலகை ஒன்றினை வைக்கவும் யோசனை தெரிவித்தார். 
 
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்லா ஹைடன், அராணாவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய நூலகத்தின் நூலகராக 4 வயது சிறுமி ஒரு நாள் பணியாற்றியது இதுவே முதல் முறையாகும்.
 

மூலக்கதை