இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்

தினமலர்  தினமலர்
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற  இறக்கம்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 27,183-ஆகவும், நிப்டி 21 புள்ளிகள் சரிந்து 8,379-ஆகவும் இருந்தன. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் மந்தமான சூழ்நிலை, அந்நிய முதலீடு வெளியேற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகின்றன. இருப்பினும் காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 8 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி 4 புள்ளிகளும் சரிந்தும் வர்த்தகமாகின.

மூலக்கதை