ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.26

தினமலர்  தினமலர்
ரூபாயின் மதிப்பு சரிவு  ரூ.68.26

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக இருந்து வரும் நிலையில் ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ.68.26-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் மந்தமான சூழலாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.68.16-ஆக இருந்தது.

மூலக்கதை