நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: நடிகை திரிஷா

தினத்தந்தி  தினத்தந்தி
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் அல்ல: நடிகை திரிஷா

சென்னை,

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, தமிழ் சமுதாயத்தையும், பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவள் நான்.  தமிழ் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு என்றுமே துணையாக நிற்பேன் என்றும் கூறியுள்ளார்.

நான் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிர்மறை கருத்து கொண்டவள் அல்ல.  நான் தமிழ் மக்களை பற்றி சொன்னதாக தவறான கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவறான கருத்து மூலம் தமிழ் மக்களிடம் இருந்து என்னை பிரிக்க எண்ணி இருக்கலாம்.  சோதனை நேரத்தில் ஆதரவாக இருந்த சக நடிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மூலக்கதை