2–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

தினத்தந்தி  தினத்தந்தி
2–வது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

மெல்போர்ன்,

தசைப்பிடிப்பால் அவதிப்படும் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஆடவில்லை. அவருக்கு பதிலாக முகமது ஹபீஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 48.2 ஓவர்களில் 220 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 60 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் 3 விக்கெட்டுகளும், ஜூனைட் கான், இமாத் வாசிம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் முகமது ஹபீஸ் 72 ரன்களும் (104 பந்து, 8 பவுண்டரி), சோயிப் மாலிக் 42 ரன்களும் (நாட்–அவுட்), பாபர் அசாம் 34 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை பாகிஸ்தான் சாய்ப்பது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். அதாவது ஒரு நாள் கிரிக்கெட்டில் அங்கு தொடர்ச்சியாக 9 தோல்விகளுக்கு பிறகு வெற்றி கண்டிருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 1–1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 3–வது ஒரு நாள் போட்டி 19–ந்தேதி பெர்த்தில் நடக்கிறது.

மூலக்கதை