பிரிமியர் பேட்மின்டன் லீக் சென்னை ஸ்மேஷர்ஸ் சாம்பியன்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடரின் 2வது சீசனில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. டெல்லியில் நேற்று முன் தினம் நடைபெற்ற விறுவிறுப்பான பைனலில், மும்பை ராக்கெட்ஸ் அணியுடன் மோதிய சென்னை ஸ்மேஷர்ஸ் 4-3 என்ற கணக்கில் போராடி வென்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை ஸ்மேஷர்ஸ் அணிக்கு முதல் பரிசாக 3 கோடி, 2வது இடம் பிடித்த மும்பை ராக்கெட்ஸ் அணிக்கு 1.5 கோடி வழங்கப்பட்டது.

மூலக்கதை