கெர்பர் - லெசியா மோதல்

தினகரன்  தினகரன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர், மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோவை (51வது ரேங்க்) எதிர்கொள்கிறார். அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் பெலிண்டா பென்சிக்குடன் (சுவிஸ், 59 வது ரேங்க்) மோதுகிறார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் ஆண்டி மர்ரே (இங்கிலாந்து) இலியா மார்சென்கோவையும் (உக்ரைன்), நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா, 2வது ரேங்க்), ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவையும் சந்திக்கின்றனர். ரபேல் நடால் (ஸ்பெயின்) தனது முதல் சுற்றில் புளோரியன் மேயரை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், ஆஸ்திரியாவின் ஜர்கன் மெல்ஸருடன் மோதுகிறார்.

மூலக்கதை