இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: கேதர் ஜாதவ் சதம்; கோலி...

தினத்தந்தி  தினத்தந்தி
இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி: கேதர் ஜாதவ் சதம்; கோலி...

புனே,

இந்தியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று தொடங்கியது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.  தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி அடித்து ஆடியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராய் 12 பவுண்டரிகள் அடித்து 73 ரன்கள் அடித்தார்.  இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 350 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு 351 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி வோக்ஸ் வீசிய 6வது பந்தினை சிக்சருக்கு விளாசினார்.  இதனால் (93 பந்துகள், 7 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) 105 ரன்களை எடுத்து சதம் அடித்துள்ளார்.

இந்நிலையில், கோலியுடன் இணைந்து ஆடிய கேதர் ஜாதவ் வோக்ஸ் வீசிய கடைசி பந்தினை பவுண்டரிக்கு அடித்து 101 (66 பந்துகள், 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) சதம் அடித்துள்ளார்.

அதற்கு அடுத்த ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் கோலி 122 ரன்கள் எடுத்த நிலையில் (105 பந்துகள், 8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) வில்லியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

மூலக்கதை