என்எஸ்ஜியில் இந்தியா இணையாததற்கு சீனாவே காரணம்: அமெரிக்கா

தினமலர்  தினமலர்
என்எஸ்ஜியில் இந்தியா இணையாததற்கு சீனாவே காரணம்: அமெரிக்கா

வாஷிங்டன்: என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இ்ந்தியா இடம்பெற முடியாமல் போனதற்கு சீனாவே காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் தெற்கு ஆசியாவிற்கான துணை வெளியுறவு செயலாளர் நிஷா தேசாய் கூறியதாவது: என்.எஸ்.ஜி.,யில் இந்தியா இணைவது ஒரு மித்த கருத்து கருத்து அடிப்படையில் முடிவு எடுத்த நிலையில், சீனாவின் எதிர்ப்பு காரணமாக சேர முடியவில்லை. என்.எஸ்.ஜி.,யில் இந்தியா உறுப்பினராக சேர தேவையான தகுதிகளை இந்தியா கொண்டுள்ளதாக, அதிபர் தெளிவாகவும், உறுதியாகவும் நம்பினார். குழுவில் சேர இந்தியா தயாராக உள்ளது. இந்த குழுவில் இந்தியா கட்டாயம்சேர வேண்டும் என அதிபர் விரும்பினார்.

என்எஸ்ஜியில் சேர இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டது. இந்த குழுவில் இந்தியா சேர்வது தொடர்பான தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை புதிய அரசு தொடரும். இந்த விவகாரத்தில் ஒரு நாடை மட்டும் கவனிக்க வேண்டியுள்ளது. அந்த நாடு சீனா எனக்கூறினார்.

மூலக்கதை