மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் பாஸ்வான் டிஸ்சார்ஜ்

பாட்னா: பீகாரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஸ்வான் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மத்திய பாஜ அரசின் ஆளும் கூட்டணியில் உள்ள லோக் ஜன சக்தி தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய உணவு மற்றும் வினியோகத்துறை அமைச்சராக உள்ளார். இவர் கடந்த 12ம் தேதி தனது சொந்த மாநிலமான பீகாரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுற்றுபயணம் செய்வதற்காக வந்திருந்தார்.

பாட்னாவில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

அவருடன் மருத்துவமனையில் அவரது மனைவி மற்றும் எம். பி. யும் மகனுமான சிராக் பாஸ்வான் ஆகியோர் அருகில் இருந்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில் மூச்சு திணறல் பிரச்னையில் இருந்து பாஸ்வான் நேற்று முழுவதும் குணமடைந்து விட்டதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

இந்த தகவலை அவர் சிகிச்சை பெற்று வந்த எச். எம். ஆர். ஐ.

மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவின் தலைமை மருத்துவர் பிரமோத் குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார் என பாஸ்வானின் சிறப்பு செயலாளர் ஆர். சி.

மீனா தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை