பீட்டா தலைமையகம் முற்றுகை - அமெரிக்க தமிழர்கள் அசத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீட்டா தலைமையகம் முற்றுகை  அமெரிக்க தமிழர்கள் அசத்தல்

வெர்ஜினியா - ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தியும், இதற்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கடந்த 7 நாட்களாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இளைஞர்களின் அமைதிப் போராட்டத்தை டி. வி. யில் கண்டு, வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மக்கள் அசந்தனர்.

இதையடுத்து, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்து என பல நாடுகளில் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஆதரவு தெரிவித்தனர். இந்த சூழலில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் நேற்று பீட்டா தலைமையகம் அமைந்துள்ள வெர்ஜினியா மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீட்டா தலைமையகம் முன்பாக குவிந்த தமிழர்கள், ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்றும், ‘ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் பீட்டாவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை எதிர்த்தும் கருப்பு கொடி காட்டியும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டங்களில் 16 மாகாணங்களில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்றனர்.

.

மூலக்கதை