பணம் வாங்க தூண்டிய பேச்சு ஆம் ஆத்மி அங்கீகாரம் ரத்தாகிவிடும்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: கோவா தேர்தல் பிரசாரத்தில் பணம் வாங்க தூண்டும் வகையில்டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். இதுகுறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியது. அதன் பின் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் எதிர்க்காலத்தில் நீங்கள் பேசினால் தேர்தல் கமிஷன் உங்கள் மீதும், உங்கள் கட்சியின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும். அதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களும் பயன்படுத்தப்படும். குறிப்பாக தேர்தல் விதிமுறைகள் பகுதி 16 அ பிரிவின் கீழ் உங்கள் கட்சி அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் எச்சரிக்கை குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ‘‘தேர்தல் கமிஷன் தவறு செய்துவிட்டது. இதை எதிர்த்து நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்’ என்றார்.

மூலக்கதை