திருவனந்தபுரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு 26 முதல் தடை

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் 26ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று மேயர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேயர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: திருவனந்தபுரம் நகரைச் சுத்தமான நகராக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தாலே நகரம் சுத்தமாகி விடும். பிளாஸ்டிக் பைகளில் கழிவுகளை கட்டி ரோட்டில் வீசுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை ரோட்டில் போட்டு எரிக்கவும்  செய்கின்றனர். இதனால் சுற்றுப்புற சுகாதாரம் அதிக அளவில் கெடுகிறது.எனவே முதல்கட்டமாக 50 மைக்ரானுக்கு கீழ்உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது 50.1 மைக்ரானில் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். எனவே பிளாஸ்டிக் பைகளுக்கு வரும் 26ம் தேதி முதல் முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது என்றார்.

மூலக்கதை