தங்க வளம் பற்றிய ஆய்வுக்கு அடித்தளம் ஆந்திராவில் மீண்டும் திரும்பிய ‘பொற்காலம்’

தினகரன்  தினகரன்

ஐதராபாத்: ஆந்திராவின் சித்தூர் காடுகளில் தங்க வளம் பற்றிய ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் பல ஆண்டுக்கு முன்னர், பல்வேறு கிராமங்களில் தங்கம் தோண்டி எடுக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது மீண்டும் அந்த ‘பொன்னான காலம்’ திரும்பியிருக்கிறது.ஆந்திராவில் தங்கத்தை தேடுவதற்கான ஆய்வு மேற்கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டத்தின் சதுகோண்டா, தம்பல்லாபள்ளி பகுதி காடுகளில் 1.22 கோடி டன் தங்க தாதுக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. முந்தைய காலங்களில் அனந்த்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 70 டன் தங்கம் வரை தோண்டி எடுக்கப்பட்டு வந்துள்ளது.  எனவே ஆய்வு வெற்றியடையும்பட்சத்தில், கிருஷ்ணா மாவட்டத்தில் தங்க சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் ஆந்திர அரசின் முயற்சியை ஊக்குவிப்பதாக அமையும் என சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மூலக்கதை