அலங்காநல்லூரில் கொட்டும் மழையால் ஏற்பாடுகள் தொய்வு

தினமலர்  தினமலர்
அலங்காநல்லூரில் கொட்டும் மழையால் ஏற்பாடுகள் தொய்வு


மதுரை: அலங்காநல்லுாரில் மழை பெய்து வருவதாலும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, மதுரை கலெக்டர் வீரராகவ ராவ் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

மக்கள் விரும்பும் அனைத்து இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்த தயாராக இருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் விதிகளின் படி நடத்தப்படும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம கமிட்டியினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, தேவையான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு செய்து வருகிறோம்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கிராம மக்களும் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கோரிக்கையும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது தான்.

ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்ததால் போட்டி நடத்த முடியாமல் இருந்தது. தற்போது, தமிழக அரசின் நடவடிக்கையால் தடை நீங்கி உள்ளது. அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் நிரந்தரமானது. இதனால், போராட்டத்தில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தற்போது மழை பெய்து வருகிறது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை