ஹாங்காங் நிர்வாகம் அறிவிப்பு இந்திய பயணிகளுக்கு விசா சலுகை ரத்து

தினகரன்  தினகரன்

பெய்ஜிங் : சீனாவின் சிறப்பு நிர்வாக பிராந்தியமான ஹாங்காங்கில், இந்தியர்கள் விசா இல்லாமல் 14 நாட்கள் தங்க சலுகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த சலுகை நேற்றுடன் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் குடியேற்றத்துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை முதல் ஹாங்காங் வரும் இந்தியர்கள், பயணத்துக்கு முந்தைய பதிவை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள வேண்டுமென ஹாங்காங் குடியேற்றத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மையமான ஹாங்காங்கில் தொழில், வர்த்தக ரீதியாகவும், சுற்றுலா பயணிகளாகவும் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் இந்தியர்கள் சென்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த சலுகை ரத்துக்கு, ஹாங்காங்கில் தஞ்சமடையும் இந்திய அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே காரணம் என அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இந்தியா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை