தென் ஆப்ரிக்கா முன்னிலை

தினகரன்  தினகரன்

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, ஜோகன்னஸ்பர்க் நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா 19 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் தென் ஆப்ரிக்கா 10 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது (மில்லர் 40, பெகார்டியன் 31*). அடுத்து களமிறங்கிய இலங்கை 10 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து தோற்றது (டிக்வெல்லா 43, தனஞ்ஜெயா 27). மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மூலக்கதை