2வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்து 260/7

தினகரன்  தினகரன்

கிறைஸ்ட்சர்ச்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்துள்ளது.ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 289 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. சவும்யா சர்க்கார் 86, ஷாகிப் அல் ஹசன் 59, நூருல் ஹசன் 47 ரன் எடுத்தனர். நியூசி. பந்துவீச்சில் சவுத்தீ 5, போல்ட் 4, வேக்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இரண்டாம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்துள்ளது. லதாம் 68, ராஸ் டெய்லர் 77, சான்ட்னர் 29 ரன் எடுத்தனர். நிகோல்ஸ் 56, சவுத்தீ 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை