இத்தாலி பேருந்து விபத்தில் 7 பேர் சாவு

தினகரன்  தினகரன்

ரோம்: இத்தாலியில் குழந்தைகளை ஏற்றி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதில் குறைந்தபட்சம் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.வடக்கு இத்தாலியில் நேற்று முன்தினம் குழந்தைகளை ஏற்றி கொண்டு வந்த ஹங்கேரி பேருந்து எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  சென்றனர். இந்த விபத்தில் குறைந்தபட்சம் 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும், படுகாயம் அடைந்த 12க்கும் மேற்பட்டோரை வெர்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மூலக்கதை