பரிஸ் - Donald Trumpக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  Donald Trumpக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

இன்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி Donald Trumpக்கு எதிராக பரிசில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
ஐக்கிய அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump பதவியேற்றதை கண்டித்து இன்று சனிக்கிழமை பரிஸ் உட்பட பிரான்ஸ் முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பரிசில் பரிசில் இன்று மதியம் 2 மணி அளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. Trocadéro பகுதியில் பெருமளவான மக்கள் கூடி அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் Donald Trumpக்கு எதிரான வாசங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்திருந்தனர். மேலும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஒரு இனவாதி என ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்திருந்தனர்.  ஆர்ப்பாட்டம் எந்த வித கலவரங்களுக்கும் உள்ளாகாமல் மிக அமைதியான முறையில் இடம்பெற்றது.
 
தவிர, பிரான்சின் ஏனைய நகரங்களான Bordeaux, Marseille, Montpellier மற்றும் Strasbourg ஆகிய இடங்களிலும் Donald Trumpக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை