‛செப்' ஹாலிவுட் ரீ-மேக்கில்லை - சைப் அலிகான்

தினமலர்  தினமலர்
‛செப் ஹாலிவுட் ரீமேக்கில்லை  சைப் அலிகான்

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகான், தற்போது ‛செப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டில் வெளியான செப் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. இதனை இயக்குநர் ராஜா மேனனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஆனால் நடிகர் சைப் அலிகானோ இது ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் இல்லை என்று கூறியுள்ளார்.

இதுப்பற்றி சைப் அலிகான் கூறியிருப்பதாவது... ‛‛செப் படம் அப்பா - மகன் உறவை சொல்லும் படம். ஹாலிவுட் செப் படத்திலிருந்து நிறைய விஷயங்கள் மாறுபட்டு உள்ளது'' என்று கூறியுள்ளார்.

செப் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

மூலக்கதை