சஞ்சய் தத்தின் மனைவியாக நடிக்கும் நேகா பாஜ்பாய்

தினமலர்  தினமலர்
சஞ்சய் தத்தின் மனைவியாக நடிக்கும் நேகா பாஜ்பாய்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாக உள்ளது. சஞ்சய்யாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். சஞ்சய்யின் நண்பரும், பிரபல இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது படத்திற்கு முந்தை பீரி-புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடக்கிறது, விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய்யின் அப்பாவான சுனில் தத் ரோலில் நடிகர் பரேஷ் ராவல் நடிக்க இருந்த நிலையில் இப்போது சஞ்சய்யின் மனைவி மான்யா தத் ரோலி்ல நடிகைய நேகா பாஜ்பாய் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

நேகா பாஜ்பாய், கரீப் படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரியானார். அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். கடைசியாக ‛ஆசிட் பேக்டரி' என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் மனைவி ஆவார்.

மூலக்கதை