டான் 3-க்கு பர்கானிடம் கதையில்லை - ஷாரூக்கான்

தினமலர்  தினமலர்
டான் 3க்கு பர்கானிடம் கதையில்லை  ஷாரூக்கான்

ஷாரூக்கான் - பர்கான் அக்தர் கூட்டணியில் வெளிவந்த ஆக்ஷ்ன் படங்கள் ‛டான்' மற்றும் ‛டான்-2'. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது. டான்-3 படம் உருவாக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தனது ரயீஸ் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கும் ஷாரூக்கானிடம் டான் 3 பற்றி கேட்டபோது, ஷாரூக் கூறியதாவது...

‛‛சில படங்களுக்கு தான் ஒரு படத்தின் தொடர்ச்சி அமையும். அப்படி வரும் படங்களை ரசிகர்களும் ரசிக்க வேண்டும். நான் டான்-3 கதையில் நடிக்க தயாராக உள்ளேன். ஆனால், தற்போதைய சூழலில் டான்-3-க்கான கதை பர்கான் அக்தரிடம் இல்லை'' என்று கூறியுள்ளார்.

மூலக்கதை