இப்ப போராட்டம்தான் முக்கியம்... அப்றமா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறேன்! - மெரீனா திரும்பிய லாரன்ஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்ப போராட்டம்தான் முக்கியம்... அப்றமா ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறேன்!  மெரீனா திரும்பிய லாரன்ஸ்

சென்னை: மெரீனாவில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ராகவா லாரன்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அவர் நேராக மெரீனாவுக்கே திரும்பி போராட்டக் குழுவுடன் இணைந்து கொண்டார்.

மருத்துவர்கள் அவரை ஒருவாரம் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆனால், "இது முக்கியமான கட்டம்... வரலாற்று நிகழ்வு. போராட்ட களத்தில் நானும் இருந்தே ஆக வேண்டும். அந்த மக்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவு மற்றும் குடிநீர், பெண்களுக்காக கழிப்பறை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்பாடு செய்ய நான் நேரில் இருந்தாக வேண்டும். போராட்டம் வெற்றி பெற்ற பிறகு வந்து ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன்," என்று கூறிவிட்டு மீண்டும் மெரீனாவுக்கு ராகவா லாரன்ஸ் சென்றார்.

திரும்பி வந்த ராகவா லாரன்ஸை மாணவர்கள் வரவேற்று நலம் விசாரித்தனர்.

மெரீனா ஜல்லிக்கட்டு போராளிகள் எந்த நடிகர் நடிகைகளையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ராகவா லாரன்ஸ், ஆர் ஜே பாலாஜி போன்ற வெகு சிலரை மட்டுமே போராட்டக் களத்துக்குள் அனுமதித்துள்ளனர்.

மூலக்கதை