உலகம் நம்மை பார்க்கிறது, வணங்குகிறேன் - கமல்

தினமலர்  தினமலர்
உலகம் நம்மை பார்க்கிறது, வணங்குகிறேன்  கமல்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உலகமே நம்பை பார்க்கிறது, பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம், வணங்குகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கொளுத்தும் வெயிலையும், பனியையும், மழையையும் பொருட்டப்படுத்தாமல் இரவு பகலாக போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக திரையுலக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதிலும், நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்தே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு தொடர்பாகவும், இளைஞர்களின் எழுச்சி பற்றியும் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது...

‛‛உலகம் நம்மை பார்க்கிறது. தமிழர்கள், இந்தியாவை பெருமைப்பட செய்துள்ளீர்கள். உங்கள் நோக்கத்தில் உறுதியோடு இருங்கள். 1930-ல் ஒத்துழையாமை இயக்க அறிக்கை வரைவு மெட்ராசில் உருவாக்கப்பட்டது. இப்போது மீண்டும் 2017ல் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், டிவி சேனல்களை நடத்தி செய்திகளை திரிப்பதை நினைவில் கொள்ளுங்கள். இணையதளம் வாயிலாக உங்கள் அறிவை பெறுங்கள். அகிம்சை வழியில் போராடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

இது மக்களின் இயக்கம், நட்சத்திரங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு மட்டுமே தரலாம். போராட்டத்தை திருடிவிடக்கூடாது என்பதே எனது அபிப்ராயம். நான் டிவி செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்பது மாணவர்கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம், வணங்குகிறேன்''

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

மூலக்கதை