மிகவும் கண்ணியமான முறையில் அறப்போராட்டம் – மெரீனாவில் மாணவர்கள் திரண்டது எப்படி?

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
மிகவும் கண்ணியமான முறையில் அறப்போராட்டம் – மெரீனாவில் மாணவர்கள் திரண்டது எப்படி?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் எப்படி மாணவர்கள் திரண்டனர் என்ற முழுவிவர அறிக்கையை மத்திய அரசுக்கு மத்திய உளவுத்துறை அனுப்பி உள்ளது. அதிலுள்ள தகவல்கள் மத்திய அரசை உலுக்கியதன் விளைவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. வழக்கமாக ஒரு போராட்டம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிப்பது உளவுத்துறையின் முக்கிய கடமை. ஆனால் தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த தகவல்களை சரியாக உளவுத்துறை போலீஸார் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சட்டம், ஒழுங்கு போலீஸார். அதற்கு மாநில உளவுத்துறை போலீஸார், ’நாங்கள் ஏற்கெனவே தகவலைச் சொல்லி விட்டோம். ஆனால் உயரதிகாரிகள் அதைக் கண்டுக்கொள்ளவில்லை’ என்று சட்டம், ஒழுங்கு போலீஸாரை சாடுகின்றனர். மாநில உளவுத்துறை மற்றும் சட்டம், ஒழுங்கு போலீஸார் இடையே இந்த பிரச்னை இப்படியிருக்க, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கே அதிர்ச்சித் தரும் அறிக்கையை அளித்து இருக்கிறது.

இதுகுறித்து பேசிய மத்திய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், “மாநில அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அறிக்கையாக தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வருவதே எங்களது வேலை. ஜல்லிக்கட்டுக்குத் தடை இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றே மத்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்திருந்தோம். தற்போது எங்கள் ரிப்போர்ட் தவறாகி விட்டது. உடனடியாக போராட்டங்கள் நடக்கும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அங்குள்ள நிகழ்வுகளை உன்னிப்பாக கண்காணித்து ரிப்போர்ட் தயாரித்தோம். அதில், மக்களின் எழுச்சிப் போராட்டம், நிச்சயம் பெரியளவில் பூதாகரமாக வெடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், வழக்கமாக ஒரு போராட்டம் என்றால் அதற்கு தலைமை ஒன்று இருக்கும். தற்போது நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தலைமையே இல்லை. இதனால் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதில் சிக்கல் இருப்பதையும் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.

மூலக்கதை