தமிழில் மீண்டும் மம்மூட்டி மகன் ஜோடி போட 3 ஹீரோயின்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழில் மீண்டும் மம்மூட்டி மகன் ஜோடி போட 3 ஹீரோயின்கள்

வாய் மூடி பேசவும், ஓ. கே. கண்மணி படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். மம்மூட்டி மகனான இவர் தனக்கென மல்லுவுட்டில் தனி இடம் பிடித்திருப்பதுடன் தமிழிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார்.

ஓ. கே. கண்மணி படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தவர் திடீரென்று அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

அதன்பிறகு தமிழில் அவரை மீண்டும் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயன்றபோது மலையாள படங்கள் மட்டுமே போதும் என்று கூறி மறுத்துவிட்டார்.

புதுமுக இயக்குனர் கார்த்திக் என்பவர் அவரிடம் பல முறை சந்திப்பு ஏற்படுத்திக்கொண்டு தமிழில் நடிக்க கேட்டுவந்தார். ஒருவழியாக அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதில் துல்கருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். ஒருநாள் கூத்து படத்தில் நடித்த நிவேதா பெதுராஜ், தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் ஆகியோர் தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெரிகிறது.

மற்றொரு கதாநாயகி தேர்வு நடக்கிறது.


.

மூலக்கதை