முறுக்கு மீசை, தாடியுடன் புதுகெட்டப்பில் விஜய் 3வது முறையாக காஜல் ஜோடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
முறுக்கு மீசை, தாடியுடன் புதுகெட்டப்பில் விஜய் 3வது முறையாக காஜல் ஜோடி

விஜய் நடித்த பைரவா பொங்கலையொட்டி திரைக்கு வந்தது. இதையடுத்து அவர் நடிக்கும் 61வது படத்தை அட்லி இயக்குகிறார்.

இப்படத்துக்கு கதாநாயகி வேட்டை நடந்து வந்தது. துப்பாக்கி, ஜில்லா படங்களில் ஜோடியாக நடித்த காஜல் அகர்வால் மீண்டும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் அவரிடம்,‘விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கிறீர்களா?’என்றபோது ஆம் என பதில் அளித்துள்ளார் காஜல் அகர்வால்.

தான் நடித்த 99 சதவீத படங்களில் கெட்டப் எதுவும் மாற்றாமல் ஒரிஜினல் தோற்றத்திலேயே நடித்திருக்கிறார் விஜய்.

பைரவா படத்தில் மட்டும் அவரது ஹேர் ஸ்டைலில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அட்லி படத்திற்காக புதுகெட்டப்புக்கு மாறி இருக்கிறார்.

முறுக்கு மீசை, தாடியுடன் இப்படத்தில் நடிக்கிறார். தற்போது புதிய தோற்றத்துக்கும் அவர் மாறி வருகிறார்.

தமன் இசை அமைக்க பேச்சு நடக்கிறது. அடுத்த மாதம் முதல் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


.

மூலக்கதை