கொட்டும் மழையில் போராட்டம் - புதுவையில் மாணவர்கள் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொட்டும் மழையில் போராட்டம்  புதுவையில் மாணவர்கள் ஆவேசம்

புதுச்சேரி -  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் 17ம்தேதி தொடங்கிய போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 4வது நாளான நேற்று ஏஎப்டி திடலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

நேற்றிரவு 8. 30 மணியளவில் புதுவையில் திடீரென சாரல் மழை தொடங்கியது. சிறிதுநேரத்தில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

விடியவிடிய நீடித்த மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை மாணவ - மாணவிகள், இளைஞர்கள் தொடர்ந்தனர். யாரும் கலைந்து செல்லாமல் மழையில் நனைந்தபடி புதுவை - கடலூர் சாலையில் மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

இந்நிலையில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்தது.

தரையில் அமர முடியாத நிலையில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் லாரிகளில் மணல் அடித்து அவற்றை சரிசெய்யும் பணியில் போராட்டக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் நாற்காலிகளும் அங்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதிதாக மாற்று இடத்தில் பந்தல் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனால் மாணவர்களின் போராட்டம் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

.

மூலக்கதை