கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் 85 ஆண்டுகளுக்கு பிறகு பிப் .2ல் கும்பாபிஷேகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் 85 ஆண்டுகளுக்கு பிறகு பிப் .2ல் கும்பாபிஷேகம்

ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.

யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது. கோயிலில் கடந்த 1932ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது 85 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2017 பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடந்த 19ம்தேதி 400 வருடங்களுக்கு பின் கோயிலில் கொடிமரம் அமைக்கப்பட்டது.

தற்போது கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணிகளை சென்னை மண்டல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீலட்சுமி ஆய்வு செய்தார்.

கலசத்திற்கு செல்லும் படிக்கட்டு அமைக்கும் பணியின் தரம், கோயிலை சுற்றி பாதுகாப்பு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய நிற்கும் இடம், சிற்பங்களின் பாதுகாப்பு, இதற்காக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

.

மூலக்கதை