சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ​​கொழும்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ் MIRROR  தமிழ் MIRROR
சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ​​கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தியாவின் தமிழ் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இலங்கையில் பல பாகங்களிலும் போராட்டங்கள்  இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கொழும்பு காலிமுகத்திடலில் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று இன்று முற்பகல் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிளவானவர் இணைந்துகொண்டுள்ளனர்.

இதே​வேளை, இன்று பிற்பகல் நான்கு மணிக்கு கொழும்பு வௌ்ளவத்தையிலும் சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

மூலக்கதை