ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு போலீசார் மிரட்டல் - உத்திரமேரூரில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டுக்காக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்கு போலீசார் மிரட்டல்  உத்திரமேரூரில் பரபரப்பு

உத்திரமேரூர் - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், பொதுமக்களை போலீசார் மிரட்டியதால் உத்திரமேரூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டனர். அவர்கள் உத்திரமேரூர் சன்னதி தெருவில் இருந்து ஊர்வலமாக சென்று பஜார் வீதியாக உத்திரமேரூர் பஸ் நிலையத்ைத அடைந்தனர்.



அங்கு அனைவரும் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மாலை 6 மணியளவில் வியாபாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆனால் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அங்கேயே அமர்ந்திருந்தனர். திடீரென அங்கு வந்த போலீசார், ‘உங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை.

கலைந்து செல்லுங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இதையடுத்து, பஸ்களை பஸ் நிலையத்துக்குள் இயக்க செய்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கறாராக போலீசார் கூறினர்.

இதனால் போராட்டக்காரர்கள், ஊர்வலமாக குடியிருப்பு பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் பொதுமக்களும் சென்றனர்.

சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் பஸ் நிலையத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் விடிய, விடிய தொடர்ந்து நடந்து வருகிறது.

.

மூலக்கதை