அல்லிக்குழி கிராமத்தில் மருத்துவ முகாம் 900 பேருக்கு இலவச சிகிச்சை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அல்லிக்குழி கிராமத்தில் மருத்துவ முகாம் 900 பேருக்கு இலவச சிகிச்சை

ஊத்துக்கோட்டை - ஊத்துக்கோட்டை  அருகே பூண்டி ஒன்றியம் அல்லிக்குழி கிராமத்தில் கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின்  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி நாதன் முகாமை தொடங்கி வைத்தார்.

இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி தலைமை தாங்கினார்.   டாக்டர்கள் அருண், வசந்தகுமார், ராணி, சுகாதார மேற்பார்வையாளர் சாந்தலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், நித்யானந்தன், ஜெயசூர்யா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். டாக்டர் லட்சுமி தலைமையில் 54 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் இசிஜி, ஸ்கேன், ரத்த அழுத்தம், கண், பல் சிகிச்சை, தோல்நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து இலவச மருந்து மாத்திரை வழங்கினர்.

முகாமில் 900 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ. 4 ஆயிரம் வீதம் 8 பேருக்கு ரூ. 32 ஆயிரம் ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தியதற்கான கடிதம் வழங்கப்பட்டது.

ஊராட்சி உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.

.

மூலக்கதை