மாணவர்கள் தொடர்புக்கு மெரினாவில் 'ஹைடெக்'

தினமலர்  தினமலர்
மாணவர்கள் தொடர்புக்கு மெரினாவில் ஹைடெக்

சென்னை மெரினாவில், போராட்டத்தில் உள்ள மாணவர்கள் வசதிக்காக, நவீன தொலை தொடர்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என, போராடுகிறோம். இது தொடர்பாக, டில்லி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை, பலர் மிகைப்படுத்தி கூறி, குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர். அங்குள்ள நிலையை, அப்படியே தெரிவிக்க, டில்லி நண்பர்கள் முன் வந்தனர். எனவே, தகவல் தொடர்புகளை தடையின்றி பெற வசதியாக, இணையதள வசதியுடன் கூடிய, 'ஹைடெக்' தொலை தொடர்பு வசதிகளை, மெரினாவில் உருவாக்கி உள்ளோம். அதற்கு தேவையான உதவிகளை, தனியார் நிறுவனம் வழங்கி உள்ளது. இதனால், உண்மையான தகவல்களை எங்களால், உடனுக்குடன் பெற முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

மூலக்கதை