பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளேன் - நிவேதா

தினமலர்  தினமலர்
பெண்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளேன்  நிவேதா

சின்னத்திரையில் கல்லூரி காலம், செந்தமிழ் பெண்ணே ஆகிய நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருபவர் நிவேதா. இந்த நிகழ்ச்சிகள் மூலம் நவீன பெண்களின் சீறிய சிந்தனை, விழிப்புணர்வு உள்ளிட்ட அவர்களின் அசாத்திய திறமையைப்பார்த்து அசந்து போகிறேன் என்கிறார் தொகுப்பாளினி நிவேதா.

மேலும் அவர் கூறுகையில், இன்றைக்கு பெண்கள் எல்லா துறைகளிலுமே தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆண்களுக்கு சரி நிகராக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, தாங்கள் கடந்து வந்த பாதை, சந்தித்த பிரச்சினைகள், எதிர்கொள்ள நினைக்கும் விசயங்கள் பற்றியும் ரொம்ப தெளிவாக பேசுகிறார்கள். அந்த வகையில், பெண்களுக்கென நடத்தப்பட்டு வரும் கல்லூரி காலம், செந்தமிழ் பெண்ணே ஆகிய நிகழ்ச்சிகளில் இன்றைய நவீன பெண்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது கருத்துககளை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

இதில், தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்தும் இந்த நிகழ்ச்சியில் சிலர் கலந்து கொண்டு வருகிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் எனக்கும் ரொம்ப ஆர்வமாக உள்ளது. அதனால் தொடர்ந்து பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதன்காரணமாகவே சிலரைப்போன்று அடுத்தபடியாக சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை எதுவும் எனக்கு ஏற்படவில்லை. சின்னத்திரையில் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண் டும் என்ற ஆர்வமே அதிகரித்துள்ளது என்கிறார் தொகுப்பாளினி நிவேதா.

மூலக்கதை