மீண்டும் சினிமாவுக்கு வந்த சீரியல் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல்

தினமலர்  தினமலர்
மீண்டும் சினிமாவுக்கு வந்த சீரியல் இயக்குனர் எஸ்.என்.சக்திவேல்

சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலை இயக்கி வருபவர் எஸ்.என்.சக்திவேல். சீரியலில் தனது காமெடி திறமையை பல வருடங்களாக வெளிப்படுத்தி வந்த அவர், இவனுக்கு தண்ணியில கண்டம் படம் மூலம் சினிமாவில் என்ட்ரியானார். சின்னத்திரை நடிகர் தீபக், நேகா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்த அந்த படமும் பெரிய அளவில் அவருக்கு வெற்றியாக அமைந்தது. பின்னர் உடனடியாக அவர் அடுத்த படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், மறுபடியும் சின்ன பாப்பா பெரிய பாப்பாவை இயக்கி வந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஆர்.கே - வடிவேலு இணைந்து நடிக்கும் நீயும் நானும் நடுவுல பேயும் -என்ற படத்தை இயக்குகிறார். இதனால் தண்ணியுல கண்டம் படத்திற்கு பிறகு மறுபடியும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலை இயக்கி வந்த எஸ்.என்.சக்திவேல், இப்போது அந்த சீரியலை இயக்கும் வேலைகளை தனது அசோசியேட்டிடம் கொடுத்து விட்டு நீயும் நானும் நடுவுல பேயும் படத்தின் திரைக்கதை எழுதும் வேலைகளில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார்.

மூலக்கதை