தமிழர்களின் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு: மம்முட்டி

தினமலர்  தினமலர்
தமிழர்களின் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு: மம்முட்டி

தமிழக மக்களின் போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக் காட்டு என்று மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஜாதி மதத்தையும் பாராமல், ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல், எந்த வன்முறையுமின்றி லட்சக்கனக்கான மக்கள் தமிழ்நாட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இந்த போராட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் தோழர்களே. இவ்வாறு அதில் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை