பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு

ஆமதாபாத் : ‘மத்­திய அர­சின் பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், ஸ்மார்ட்­போன் விற்­பனை உயர்ந்­துள்­ளது’ என, சாம்­சங் இந்­தியா நிறு­வ­னத்­தின், மொபைல்­போன் பிரி­வின் துணை தலை­வர் மனு சர்மா தெரி­வித்­துள்­ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், ரொக்க பரி­வர்த்­த­னை­யில் இருந்து, ‘டிஜிட்­டல்’ எனப்­படும் மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு பலர் மாறி வரு­கின்­ற­னர்.இதற்­காக, ‘இ–வாலட்’ எனப்­படும் மின்­னணு பணப் பை உள்­ளிட்ட பல்­வேறு சேவை­களை, மக்­கள் பயன்­ப­டுத்­து­வது அதி­க­ரித்­துள்­ளது. இத்­த­கைய வச­தி­களை சுல­ப­மாக மேற்­கொள்ள, ஸ்மார்ட்­போன் உத­வு­வ­தால், அவற்றை வாங்­கு­வ­தும் அதி­க­ரித்து வரு­கிறது.இது, ஒட்­டு­மொத்த மொபைல்­போன் துறை வளர்ச்­சிக்கு துணை புரிந்­துள்­ளது.
நாட்­டில், தற்­போது, 22 கோடி பேர் ஸ்மார்ட் போன்­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். தற்­போது, ஏரா­ள­மா­னோர் மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறி வரு­வ­தை­ய­டுத்து, இந்­தாண்டு, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு ஸ்மார்ட் போன் விற்­பனை உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், பல துறை­கள் பாதிக்­கப்­பட்­டுள்ளன. ஆனால், மொபைல்­போன் துறை பெரிய அள­வில் பாதிக்­கப்­ப­ட­வில்லை. இத்­து­றை­யில், கடந்த ஆண்டு டிசம்­பர் முதல், இயல்பு நிலை திரும்­பி­யுள்­ளது. தற்­போது, மொபைல்­போன் விற்­பனை மீண்­டும் சூடு­பி­டிக்­கத் துவங்­கி­யுள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை