கே.டி.எம்., மோட்டார் சைக்கிள்கள்; பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்கிறது

தினமலர்  தினமலர்
கே.டி.எம்., மோட்டார் சைக்கிள்கள்; பஜாஜ் ஆட்டோ அறிமுகம் செய்கிறது

புனே : புனே­வைச் சேர்ந்த, பஜாஜ் ஆட்டோ நிறு­வ­னம், கே.டி.எம்., ஆர்.சி., வரி­சை­யில், இரண்டு மோட்­டார் சைக்­கிள்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின், சிறப்பு வாக­னங்­கள் பிரி­வின் தலை­வர் அமித் நந்தி கூறி­ய­தா­வது: கே.டி.எம்., ஆர்.சி., வரி­சை­யில், ஆர்.சி., 390 மற்­றும் ஆர்.சி., 200 என, இரு வகை மோட்­டார் சைக்­கிள்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம். ஆர்.சி., 390 வாக­னத்­தின் விலை, 2.25 லட்­சம் ரூபாய்; ஆர்.சி., 200 மாடல் விலை, 1.71 லட்­சம் ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. அடுத்த நிதி­யாண்­டுக்­குள், கே.டி.எம். விற்­ப­னைக்கு என, 125 பிரத்­யேக மையங்­களை அமைக்க திட்­ட­மிட்டு உள்­ளோம்.
இது­வரை, ஐரோப்­பிய மோட்­டார் பைக் நிறு­வ­ன­மான, கே.டி.எம்., உடன் இணைந்து, ஒரு லட்­சம், கே.டி.எம்., வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளோம். இதில், 37 ஆயி­ரம் வாக­னங்­கள், 2016ல் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த ஆண்டு, இரு­சக்­கர வாகன துறை­யின் வளர்ச்சி, 4.3 சத­வீ­த­மா­க­வும், நிறு­வ­னத்­தின், பந்­த­யம் மற்­றும் விளை­யாட்டு வாகன பிரி­வின் வளர்ச்சி, 20 சத­வீ­த­மா­க­வும் உள்­ளது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால், கடந்த இரு மாதங்­க­ளாக, விற்­ப­னை­யில் ஏற்­பட்ட பாதிப்பு, தற்­போது சீர­டைந்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை