‘வங்கி துவங்க எங்க நாட்டுக்கு வாங்க’; இந்தியாவுக்கு நெதர்லாந்து அழைப்பு

தினமலர்  தினமலர்
‘வங்கி துவங்க எங்க நாட்டுக்கு வாங்க’; இந்தியாவுக்கு நெதர்லாந்து அழைப்பு

கோல்­கட்டா : நெதர்­லாந்­தின் இந்­திய துாதர் அல்­போன்­சஸ் ஸ்டோ­லிங்கா கூறி­ய­தா­வது: நெதர்­லாந்­தில் அதிக முத­லீடு செய்­துள்ள நாடு­களில், இந்­தியா, ஐந்­தா­வது இடத்­தில் உள்­ளது. ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பிற்­கான, இந்­தி­யா­வின் மொத்த ஏற்­று­ம­தி­யில், 20 சத­வீ­தம், நெதர்­லாந்து வாயி­லாக நடை­பெ­று­கிறது. அத­னால், நெதர்­லாந்­தில், இந்­திய வங்­கி­கள் அல்­லது நிதி நிறு­வ­னங்­கள் கிளை­கள் அமைய வேண்­டும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, நெதர்­லாந்து நிதி துறை வழங்­கும் வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் நோக்­கில், வங்கி கிளை­களை துவக்க வேண்­டும். ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பில் இருந்து பிரிட்­டன் வில­கிய பின், நிதி துறை­யின் மைய­மாக, நெதர்­லாந்து தலை­ந­கர் ஆம்ஸ்­டர்­டாம் உரு­வா­கும் வாய்ப்பு உள்­ளது.அத­னால், இந்­திய வங்­கி­கள், நிதி நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, நெதர்­லாந்­தில் கால்­ப­திக்க வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.
இந்­தி­யா­வில், ஸ்மார்ட் சிட்டி, கப்­பல், நீர்­பா­ச­னம், கழி­வு­நீர் மேலாண்மை உள்­ளிட்ட துறை­களில், நெதர்­லாந்து நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­துள்ளன.

மூலக்கதை