ஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடி

தினமலர்  தினமலர்
ஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடி

புது­டில்லி : தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஆக்­சிஸ் பேங்க், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த மூன்­றா­வது காலாண்­டில், 73 சத­வீ­தம் சரிந்து, 580 கோடி ரூபாயை, நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 2,175 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது. அதே சம­யம், இதே கால ஒப்­பீட்­டில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 12 ஆயி­ரத்து, 531 கோடி ரூபா­யில் இருந்து, 14 ஆயி­ரத்து, 501 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதர வரு­வாய், 2,338 கோடி ரூபா­யில் இருந்து, 3,400 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
நடப்பு நிதி­யாண்­டின், முதல் ஒன்­பது மாதங்­களில், ஆக்­சிஸ் பேங்­கின் நிகர லாபம், 60 சத­வீ­தம் குறைந்து, 2,454 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 6,069 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­தி­ருந்­தது. நிகர லாபம் குறைந்­த­தற்கு, வங்­கி­யின் வசூ­லா­காத கடன் அளவு அதி­க­ரித்­ததே கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது.இவ் வங்­கி­யின் மொத்த வாரா கடன், நடப்­பாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில், 5.22 சத­வீ­தம் என்­ற­ளவை எட்­டி­யி­ருக்­கிறது. இதுவே, கடந்த நிதி­யாண்­டின் இதே காலாண்­டில், 1.68 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது.

மூலக்கதை