அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
அமெரிக்க அதிபராக பதவியேற்றார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவின், 45வது அதிபராக, டொனால்டு டிரம்ப் நேற்று பதவியேற்றார். அமெரிக்க அதிபராக இருந்த, ஒபாமாவின் பதவி காலம் முடிந்ததை அடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த, ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும், தேர்தலில், டிரம்ப் வெற்றி பெற்றார்.
வாஷிங்டனில், நேற்று இரவு நடந்த கோலாகல நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். விழாவில் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பங்கேற்றார். அதிபரைத் தொடர்ந்து, துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றனர். அதிபராக பதவியேற்ற பின், டிரம்ப் உரை ஆற்றினார்.

மூலக்கதை