துவங்கியது டிரம்ப் சகாப்தம்: அமெரிக்காவை மேலும் வலுப்படுத்தப்போவதாக உறுதி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.

வெள்ளை மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்பு விழாவில் இந்திய தூதர் நவ்ஜேத் சிங்ஷர்மா, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் பலத்த கரகோஷத்திற்கிடையே அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.

மூலக்கதை