அமெரிக்காவின் 45வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்பு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 45வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார். மேலும் துணை அதிபராக பென்ஸி பதவியேற்றார். வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. பின்பு அமெரிக்கர்கள் பலத்த கரகோஷத்திற்கிடையே அமெரிக்காவின் 45 வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார். முன்னதாக வெள்ளை மாளிகை வந்த டெனால்டு டிரம்ப் அவரது மனைவியை, தற்போதைய அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.

மூலக்கதை