அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார் டிரம்ப்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றார் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டெனால்டு டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டனர். தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.
இதற்கான பதவி ஏற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. இதில் முன்னாள் அதிபர்கள், மற்றும் தற்போதைய அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெள்ளை மாளிகை வளாகத்தில் இன்று துவங்கிய விழாவில் அதிபராக டெனால்டு டிரம்ப், துணை அதிபராக பென்ஸி ஆகியோர் பதவியேற்றனர். முன்னதாக விழாவில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அமெரிக்கர்கள் பலத்த கரகோஷத்திற்கிடையே அமெரிக்காவில் 45 வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவியேற்றார்.
முன்னதாக வெள்ளை மாளிகை வந்த டெனால்டுடிரம்ப் அவரது மனைவியை, தற்போதைய அதிபர் ஒபாமா அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.

மூலக்கதை