பரிஸ் - சாரதி இல்லா பேருந்து வெள்ளோட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL

எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து, பரிசில் கார்-து-லியோனிற்கும் (Gare de Lyon), கார்-து-ஒஸ்டேர்லிட்சிற்கும் (Gare d’Austerlitz) இடையில் இலவசப் பேருந்துச் சேவை (Navette) ஒன்று இயங்க உள்ளது.

23ம் திகதி திங்கட்கிழமையில் இருந்து, சாரதியில்லாமல் தனித்து இயங்கும் இந்தச் சிறு பேருந்து, சேவையில் ஈடுபடுகின்றது. சராசரியாக மணிக்கு 20 கிலோமீற்றர் வேகத்தில் இந்தப் பேருந்து போக்குவரத்தில் ஈடுபடும். சாதாரண பெரிய பேருந்தொன்றின் விலையான இரண்டு இலட்சம் யூரோக்கள் வீதம் இந்தச் சிறு பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அனால் சாரதியில்லாமல் தொடர்ச்சியான இயக்கத்தில் இந்தச் சேவை இருககும் என்பதால் இந்த முதலீடானது இலாபகரமானது என RATP தெரிவித்துள்ளது.

இதற்குள் நிறுவப்பபட்டிருக்கும் மென்பொருள், சிவப்பு விளக்குகள், சந்திகள், என்பவற்றில் நிறுத்தப்பட்டு, அவதானித்துச் செல்லும் வகையில் இந்தப் பேருந்தை இயக்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேருந்திற்கள் பன்னிரண்டு பயணிகள் பயணிக்க முடியும்.

இதற்கான தனிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Charles-de-Gaulle பாலத்தின் பெரும் போக்குவரத்து நெரிசலிலில் இருந்து விடுபட்டு> விரைவாகப் பயணிகள் பரிசிற்குள் பயணம் செய்ய முடியும்.

 
 

மூலக்கதை