ட்ரம்பிற்கு எதிராக சிறிலங்காவில் ஆர்ப்பாட்டம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ட்ரம்பிற்கு எதிராக சிறிலங்காவில் ஆர்ப்பாட்டம்!

 அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்கு எதிராக சிறிலங்கா அமெரிக்க தூதரக அலுவலத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 
சோசலிஸ்ட் கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவிற்கு எதிராக இன்றைய தினம் பல நாடுகளில் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருவதாக அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீனாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
குடியேறுபவர்கள், ஓரினசேர்க்கை, முஸ்லிம் மக்கள், சுழல் பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதி ட்ரம்பின் கடுமையான கொள்கை, உலக மக்களுக்கு மிகவும் எதிர்மறையானது எனவும், இதுவே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

மூலக்கதை