கட்டணமயமாகும் - அவச அழைப்புகள் !! - புதிய சட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டணமயமாகும்  அவச அழைப்புகள் !!  புதிய சட்டம்!!

அவசர அழைப்பின் போது கட்டணம் அறவிடுவது தொடர்பாக புதிய சட்டம் ஒன்று இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை காவல்துறையினருக்கு வரும் அவசர அழைப்புகள் அனைத்தும் இலவசமாக இருந்துள்ளமை வாசகர்கள் அறிந்ததே. தற்போது அவசர அழைப்பு தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளில் சில முக்கிய அழைப்புகளை தவிர ஏனையவற்றுக்கு கட்டணம் அறவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர அழைப்புகள் தவிர்த்த ஏனைய தொலைபேசி உரையாடல்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 சதம் வரை அறவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசுக்குள் உள்ள அனைத்து அவசர அழைப்புக்களுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கும் போது, 'இந்த கட்டணம் அறவிடப்படுதல் தொடர்பாக 2013 ஆம் ஆண்டு கலந்தாலோசிக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. அவசர அழைப்புகளுக்கு வரும் தகவல் பரிமாற்றம், குற்றப்பதிவு போன்ற உரையாடல்களுக்கு கட்டணம் அறவிடப்படும்' என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை