மெரீனாவில் இளைஞர்கள் இடையே ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய காவலர்

PARIS TAMIL  PARIS TAMIL
மெரீனாவில் இளைஞர்கள் இடையே ஜல்லிக்கட்டை ஆதரித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய காவலர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசமாக  போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்து எறியும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

மெரீனா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும்.

மேலும், தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கு, இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்து காவலர்களுக்குமே இதே போன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார்.

இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே அவர் பேசும் போது, சில காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியழகை தொடர்ந்து பேச வைத்தனர்.

இதை தொடர்ந்து உயரதிகாரிகள் அந்த போலீஸ்காரரை அழைத்து சென்றனர்.

மூலக்கதை